அதிர வைக்கும் வீடியோ! ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி ஆண்களின் அந்த உறுப்பை அறுத்து எடுக்கும் சைக்கோ!

சென்னையில் ஆண்களை குறி வைத்து அவர்களுக்கு ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி தனியாக அழைத்துச் சென்று பிறப்புறுப்பை அறுத்து எடுத்த சைக்கோ கொலைகாரனின் வீடியோ ஆதாரம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். வீடியோவை பார்த்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.இதையடுத்து இந்த வீடியோவில் இருக்கும் நபரை எங்கேனும் பார்த்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் படியும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 25 ஆம் தேதி அன்று இரவில் ரோட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துச் சென்று அவரின் பிறப்புறுப்பை அறுத்துள்ள இந்த சைக்கோ கொலைகாரன்.அப்போது சத்தம் கேட்ட போது அருகில் இருந்தவர்கள் உடனே ஓடி வந்து பார்த்துள்ளனர் .இந்நிலையில் சைக்கோ கொலைகாரன் தப்பி ஓடிய நிலையில் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ரெட்டேரி பகுதியில் உள்ள நாராயணன் என்ற இளைஞரின் பிறப்பு உறுப்பை அந்த சைக்கோ கொலைகாரன் அறுத்துவிட்டு தப்பிச்சென்றான். அப்போது அந்த நபரிடம் பேச்சு கொடுக்கும் சைக்கோவின் சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைத்துள்ளன.

இதை வைத்தே அவரை பிடிக்க சென்னை மாநகர போலீசார் 4 தனிப்படை பிரிவுகள் அமைத்து சைக்கோ கொலைகாரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து உளவியல் மருத்துவர் களிடம் கேட்டபோது அதற்கு உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இவ்வாறு சைக்கோ போல் நடந்து கொள்வார் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.