சீருடை மாற்ற அறைக்குள் சென்ற பெண் போலீஸ்! சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

சென்னையில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண் காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.


சென்னை, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் பெண் காவலர் அருணா. கணவர் ஜெயச்சந்திரன் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது தந்தை இறந்ததாகவும், தாய் நோயால் அவதியுற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அருணா கடந்த சில மாதங்களாக மனஉளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் அருணா மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று காலை பணிக்கு செல்ல உடை மாற்றுவதற்காக அறைக்குள் சென்ற அருணா வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அறைக்குள் சென்ற கணவர் ஜெயசந்திரன் அருணா மின் விசிறியில் தூக்கிட்டுத் தொங்கியதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட அருணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.