சென்னை: ஆசையாக போண்டா சாப்பிட்ட பெண் மூச்சுத் திணறி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போண்டாவை வாயில் வைத்துக் கொண்டு கணவனிடம் கேள்வி கேட்ட மனைவி..! விக்கித் துடித்து உயிரே பறிபோன பயங்கரம்!

சென்னை சூளைமேடு காமராஜர் தெருவில் வசிப்பவர் பத்மாவதி (45 வயது). இவர் நேற்று தனது தாயாருடன் சேர்ந்து கடைக்குச் சென்றுள்ளார். பிறகு சாப்பிடுவதற்காக, போண்டா, பஜ்ஜி வாங்கி வந்துள்ளார். இருவரும் போண்டா, பஜ்ஜியை ஆசையாகச் சாப்பிட்டபோது, திடீரென பத்மாவதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக, ஆம்புலன்ஸ்க்கு தகவல் கூறப்பட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆசையாக சாப்பிட்ட போண்டா, தொண்டையில் சிக்கிக் கொண்டதே இறப்பிற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.