பட்டப்பகல்! வெட்டவெளியில் கணவனின் தம்பியுடன் சேர்ந்து இளம் பெண் செய்த செயல்! சென்னை பரபரப்பு!

சாலையோர உணவு விடுதியில் போதிய வருமானம் கிடைக்காததால், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுவந்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.


முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் ஒருவர் திருடும் சம்பவம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போதெல்லாம் குடும்பமாக சேர்ந்த திருடும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். காதலனுடன் பைக்கில் சென்று செயின் பறிப்பது, அண்ணன், தம்பி அல்லது கணவன், மனைவி என இந்த தொழிலில் பங்குதாரர்களாக சேர்ந்து திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். என்னதான் சென்னை முழுவதும் சிசிடிவி வைத்திருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு முதலில் திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்குத்தான் காவல்துறை தரவேண்டும். 

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரேவதி என்பவர் கணவருடன் சேர்ந்து சாலையோர உணவு விடுதி நடத்தி வருகிறார். அதில் போதிய வருமானம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மாலையில் தனது மச்சினன் ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். 

இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த வாரம் அம்பத்தூர் அடுத்து கள்ளிக்குப்பத்தில் போலி பதிவெண் கொண்ட வாகனத்தில் வலம் வந்துள்ளனர். அப்போது ஆள் அதிகம் நடமாட்டம் இல்லாத ஒரு மளிகைக் கடை இருப்பதை பார்த்துள்ளனர். அங்கு சென்று உரிமையாளர் பேச்சியம்மாள் என்பவரின் செயின் பறித்துக் கொண்டு தப்பி உள்ளனர்.

இது குறித்து புகார் அளிக்கப்பட்டு 64 இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்யப்பட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்தியது போலி வாகன பதிவெண் கொண்ட திருட்டு வாகனம் என்பதையும் கண்டுபிடித்தனர். 

காலையில் டிபன் கடையும், மதியம் கணவரின் தம்பியுடன் சேர்ந்து செயின் பறிப்பிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் ஈடுபட்டு வந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.