சாலையில் கத்தை கத்தையாக கிடந்த ரூ.8 லட்சம்! எடுத்து போலீசிடம் கொடுத்த நபர் கம்பி எண்ணும் பரிதாபம்! அதிர வைக்கும் காரணம்!

சென்னையில் 17 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். கீழே பணம் கிடைத்ததாக ஜூஸ் வியாபாரி தெரிவித்ததும் பொய் என தற்போது தெரியவந்துள்ளது.


சென்னை மகாகவி பாரதி நகரை சேர்ந்த முகமது அபுபக்கர் சித்திக் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 12ம் தேதி அன்று ரூ.17.91 லட்சம் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது மூர் தெரு அருகே 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணத்தை பறித்துச் சென்றது. இந்த வழக்கில் கொடுக்கப்பட்ட புகாரில் வடக்குக் கடற்கரை காவல் நிலைய போலீஸார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். 

இதற்கிடையே ஜூஸ் வியாபாரி ஒருவர் காவல்துறை அதிகாரிக்கு போன் செய்து ஆட்சியர் அலுவலகம் அருகே கீழே பை ஒன்று இருந்ததாகவும் அதில் 8 லட்ச ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிகாரியின் அறிவுறுத்தலில் காவல் துறை அதிகாரியைச் சந்தித்து பணத்தை ஒப்படைத்தார் ஜூஸ் வியாபாரி.

பணத்தை ஒப்படைத்த ஜூஸ் வியாபாரியைப் பாராட்டினார் போலீஸார் அதிகாரி. இதையடுத்து பணத்தை பறிகொடுத்த சித்திக் வடக்கு காவல் நிலையம் வந்தார். அப்போது சித்திக், தான் தொலைத்தது ரூ.17.91 லட்சம் எனக் கூற போலீசாரின் சந்தேகம் ஜூஸ் வியாபாரி மீது திரும்பியது. உடனே சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அதன்பிறகு ஜூஸ் வியாபாரியிடம் முறையாக போலீஸ் விசாரிக்க மீதிப் பணம் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் வீட்டில் இருந்து, ரூ.7.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை 16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீதிப்பணம் எங்கே போலீசார் விசாரிக்க அதை பணத்தை வழக்கறிஞர்கள் எடுத்து சென்றுவிட்டதாக தெரிவித்தார். அந்த வழக்கறிஞர்களை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் ஜூஸ் வியாபாரிக்குத் தொடர்பு உள்ளதா என்பது வழக்கறிஞர்கள் டீம் சிக்கியபிறகுதான் தெரியவரும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பணபரிவர்த்தனை தற்போதெல்லாம் செல்போனிலேயே நடைபெறுகிறது. ஆனால் பணத்தை இப்படித்தான் பைக்கில் எடுத்து சென்று தருவேன் என அடம்பிடிப்பது என்ன நியாயம்?