அண்ணியின் தங்கையை வீட்டுக்கு வரவழைத்து உறவுப் பையன் செய்த கொடூர செயல்! நடந்ததை அறிந்து அதிர்ந்த குடும்பம்!

சென்னையில் தனது அண்ணன் மனைவியின் தங்கையை வீட்டுக்கு வரவழைத்து இளைஞர் ஒருவர் செய்த செயல் அதிர வைத்துள்ளது.


தஞ்சாவூரை சேர்ந்த அகிலா என்ற இளம்பெண், தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் தங்கி, பல்லாவரத்தில் லேப் டெக்னிசியனாக வேலை செய்து வந்தார். இவருடைய சகோதரி கணவர் மற்றும் அவருடைய சகோதரர் சந்தோஷ் உடன் சிட்லபாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சகோதரரின் வீட்டில் தங்கி கொண்டே சந்தோஷ் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் தமது சகோதரி வீட்டிற்கு அகிலா அடிக்கடி சென்று வந்த போது, அவர் மீது அங்கிருந்த சந்தோஷிக்கு ஒரு தலை காதல் ஏற்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்த சந்தோஷ் நேரம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பிரசவத்திற்குகாக அவரது சகோதரரும், அகிலாவின் சகோதரியும் ஊருக்கு சென்றுள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொள்ள நினைத்த சந்தோஷ், கடந்த செவ்வாய் கிழமை செல்போன் மூலம் அகிலாவை தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன் படி வந்த அகிலா வீட்டில் ஆள் யாரும் இல்லாதது குறித்து விசாரித்து இருக்கிறார். மறுபுறம் சந்தோஷ் காதலை வெளிப்படுத்த, தாம் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே ஒருவரை காதலிப்பதாக அகிலா கூறியதாக தெரிகிறது.

இதனால் வெறுப்பான சந்தோஷ் தன்னை திருமணம் செய்து கொள்ள கூறி அகிலாவிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற சந்தோஷ், அகிலாவை கீழே தள்ளி கைகளால் கடுமையாக தாக்கிவிட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

அதன் பின்னர் புதன்கிழமை அதிகாலையில் அகிலா கேட்டில் இடித்து கொண்டதால் தலையில் அடிப்பட்டு மயங்கியதாக கூறி, தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சந்தோஷ் அழைத்துள்ளார். ஆனால் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சந்தோசை கைது செய்துள்ளனர்.