முதலில் தாய்! பிறகு 3 பெண்கள்! கொடூரமாக கொன்று சடலங்களுடன் உறவு! சென்னையை மிரட்டிய சைக்கோவின் தற்போதைய நிலை!

சென்னையில் ஒரே வீட்டில் இருந்த தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் அபராதமாக விதித்துள்ளது.


சென்னை ராயப்பேட்டை முத்து தெருவில் வசித்து வருபவர் பாண்டியம்மாள், இவரது கணவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இந்நிலையில் பாண்டியம்மாள் தனது 3 பெண் குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

அப்போது பாண்டியம்மாளுக்கு கணவர் இல்லாத நிலையில் அவருக்கு ஆதரவாக சின்னராஜ் என்பவர் பாண்டியம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரே வீட்டில் ஐந்து பேரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

சின்னராஜ் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் மூன்று பிள்ளைகளும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர் சின்னராஜ் அப்போது மதுபோதையில் வந்து மூன்று குழந்தைகளிடமும் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது.  

இதையடுத்து பாண்டியம்மாள் எச்சரித்து அவருடனான தொடர்பை நிறுத்திக் கொண்டுள்ளார். மற்றும் இனிமேல் வீட்டிற்கு வரவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னராஜ் ஒரு நாள் மிகுந்த மதுபோதையில் வந்து பாண்டியம்மாளையும் அவரது மூன்று பிள்ளைகளையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

மற்றும் கையில் இருந்த இரும்பு கம்பியால் 4 பேரையும் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு பாண்டியம்மாள் சடலத்துடன் முதலில் உறவு கொண்டுள்ளான். பிறகு மூன்று பெண்களின் சடலங்களுடனும் அந்த சைக்கோ உடலுறவு கொண்டிருக்கிறான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சின்னராஜ் என்பவரை கைது செய்தனர். மற்றும் இறந்த 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த வழக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு அதற்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில் நான்கு பேரையும் கொடூரமாக கொலை செய்த சின்னராஜ் என்பவருக்கு 4 ஆயுள் தண்டனைகளும் மற்றும் 25,000 ரூபாய் ரொக்கப் பணமும் அபராதமாக விதிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.