நள்ளிரவில் இடி! மின்னல்! கனமழை! வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஜெரீனாவுக்கு நேர்ந்த பயங்கரம்!

சென்னையில் விடாது பெய்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய பெருநகரங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வந்த நிலையில், சென்னையில் மட்டும் சுமார் 10 சென்டி மீட்டர் அளவிலான மழை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகளிலும் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.  

கனத்த மழையால் சென்னை ஐயப்ப செட்டி பகுதியில் வசித்து செரினா பானு வின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அருகிலிருந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடனே விரைந்து வந்து செரினா பானுவின் உடலை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழக்க நேரிடும் என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் வீட்டின் சுவர்கள் அதிக அளவில் ஈரம் ஆனால் சற்று தள்ளி இருக்க வேண்டும் என்றும் அல்லது வேறு இடத்திற்கு நகர வேண்டும் என்றும் காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.