முகமூடி அணிந்து கொண்டு பைக் ரேஸ்..! சென்னையில் இளைஞர்களுடன் சேர்ந்து இளம் பெண் செய்த பகீர் செயல்! அதிர வைக்கும் ஆதாரம்!

சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்டதாக முதன் முதலாக பெண் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவில் சென்னையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. பிராத்தனை முடிந்து அனைவரும் செல்லும்போது ஏராளமான இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்தார்கள். காமராஜர் சாலை, அண்ணாசாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சர்தார் பட்டேல் சாலை ஆகிய சாலைகளில் ஏராளமான இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பொலீசார் அளித்த புகாரில் போக்குவரத்து போலீசார் மேற்கண்ட சாலைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர்களுக்கு உதவியாக சட்டம்-ஒழுங்கு போலீசாரும் நடவடிக்கையில் இறங்கினார்கள். அப்போது மேற்கண்ட சாலைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி ரேசில் ஈடுபட்ட 158 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

பிடிபட்டவர்களில் 126 பேர் மீது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றதாக 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் முகமூடி அணிந்து கொண்டு பைக்ரேஸ் சென்ற இளம்பெண் ஒருவரும் காவல்துறையினரிடம் சிக்கினார். அதிவேகமாக சென்ற அந்த இளம்பெண்ணை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதிக்கப்பட்டது.