நோ சட்டை! ஒன்லி அடுக்குமாடி குடியிருப்பு தான்! சென்னையை மிரட்டும் சைகோ கொள்ளையன்!

சென்னை கொரட்டூர் இரவு நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கொள்ளையடிக்கும் நோக்குடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்


திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல திருட்டை தடுக்க போலீசார்  பல தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தினாலும் அதையும் மீறி கொள்ளையர்களின் விதவிதமான திருட்டு சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன. 

சென்னை கொரட்டூர் சுற்றுவட்டாரங்களில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் உலவுவதாகவும், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டன இதன் பேரில் அந்த பகுதிக்கு வந்த போலீசார் அங்கு உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மாடிப்படி வழியாக ஏறி வரும் மர்ம நபர்கள், சட்டை அணியாமல் இருப்பது தெரியவந்தது. அவர்கள் வீட்டின் பூட்டை உடைக்க முயலும் காட்சிகளும் அதில் பதிவாகி உள்ளன.

இதுபோன்று ஆளில்லாத குடியிருப்புகளில் இரவு நேரங்களில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்வதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சி.சி.டி.வி. காட்சிகள் உதவியுடன் அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சட்டை இல்லாமல் சுற்றித் திரியும் இந்த நபர் சைக்கோ கொள்ளையன் என்று போலீசார் வர்ணிக்கின்றனர். மேலும் அவனை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.