திருமணமாகி ஆறே மாதத்தில் கர்ப்பமான ஹஜிரா பானு! நடுவீட்டில் தூக்கில் தொங்கிய பயங்கரம்! சென்னை திகுதிகு!

சென்னையில் குடும்பத் தகராறில் தற்கொலைக்கு முயன்ற கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து கணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை பெரம்பூர் காமராஜ் நகரில் 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆன ஹஜிரா பானு என்பவர் வசித்து வந்தார். திருமணம் ஆன சில நாட்களிலேயே கணவருடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை அக்கம் பக்கத்தினரும் பார்த்து வந்துள்ளனர். 

இதனால் விரக்தியடைந்த ஹஜிரா பானு கடந்த வாரம் தனது வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்குப் போட்டுக்கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் ஹஜிரா பானுவை சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் ஹஜிரா பானு. 

இதையடுத்து ஹஜிரா பானு தற்கொலைக்கு அவரது கணவர்தான் காரணம் என்றும், தேவையின்றி அவர் சண்டை போட்டதால்தான் மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள் சென்னை திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து ஹஜிரா பானு தற்கொலையை சந்தேக மரணத்தின் கீழ் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஹஜிரா பானு 3 மாத கருவை தனது வயிற்றில் சுமந்து வந்துள்ளார். அவரின் அவசர முடிவால் ஒரு உயிர் உலகத்தை காணாமலே போய் விட்டது.