சென்னை ECR சொகுசு அபார்ட்மென்டில் 2 வீடுகள்! ரூ.4 கோடிக்கு வாங்கிய தாஹில் ரமணி!

சென்னை: உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தாஹில் ரமணி, சென்னை ஈசிஆரில் வீடு வாங்கியுள்ளார்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த தாஹில் ரமணி, சமீபத்தில் தனது  பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சென்னையிலேயே நிரந்தரமாக வாழ தீர்மானித்த அவர், இதற்காக, சென்னை ஈசிஆரில் சுமார் 4 கோடி மதிப்பீட்டில் 2 சொகுசு ஃபிளாட்களை வாங்கியுள்ளார்.

கடலை ஒட்டி அமைந்துள்ள உயர் ரக சொகுசு வசதிகளுடன் கூடிய அந்த அடுக்குமாடி குடியிருப்பில், ஃபிளாட் வாங்கியதன் மூலமாக, நல்ல சுற்றுச்சூழல், குறைந்த காற்று மாசு, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட சென்னையில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தாஹில் ரமணி கூறியுள்ளார்.  

மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை ஏற்க மறுத்து, தடாலடியாக தனது பதவியை தாஹில் ரமணி ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.