கடந்த வருடம் திருமணம்..! 4 மாத கைக்குழந்தை! வட மாநிலத்தவர்களை நம்பி வேலைக்கு சேர்த்தவருக்கு நேர்ந்த பயங்கரம்! சென்னை திகுதிகு!

சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வடமாநிலத் தொழிலாளர்களால் கம்பெனி உரிமையாளர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


வியாசர்பாடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆனந்தன் என்பவரின் மகன் பிரபாகரன். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மோல்டிங் செய்யும் கம்பெனியை நடத்தி வந்தார். இவரது கம்பெனிக்கு 5 நாட்களுக்கு முன்னர் வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் வேலைக்கு சேர்ந்துள்ளனர். 

இந்நிலையில் பிரபாகரன் மர்மமுறையில் கொல்லப்பட்டுள்ளார். அவரை பணத் தகராறில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலைக்கு சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் பிரபாகரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பிரபாகரனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு 2 வடமாநிலத் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்துள்ளது. அவர்கள் வேலைக்கு சேர்ந்ததும் அவர்கள் பற்றிய விவரங்களம் பிரபாகரன் குடும்பத்தாருக்கு தெரியவில்லை. கொலை நடந்த இடத்தில் மருந்து சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.அதில் ஏதேனும் துப்புத்துலங்குகிறதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரபாகரன் கடந்த ஆண்டு நந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 4 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. பிரபாகரனின் அப்பா அதிமுக பிரமுகர் ஆனந்தன்தான் இந்த தொழிற்சாலையை 40 ஆண்டுகளாக நடத்திவந்தார். தற்போது பிரபாகரன், இந்தக் கம்பெனியை நடத்திவந்துள்ளார்.