லெக்பீஸ் கேட்ட கஸ்டமர்..! கதற கதற அடித்து ரத்தம் சொட்ட சொட்ட விரட்டிய சுக்குபாய் பிரியாணி கடை ஊழியர்கள்!

சென்னையில் பிரியாணி கடையில் போதையில் தகராறு செய்தவர்களை ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.


சென்னை ஆலந்தூர் அருகே உள்ள சுக்குபாய் பிரியாணி கடைக்கு நேற்று இரவு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பிரியாணியில் லெக்பீஸ் வைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாற வாடிக்கையாளர் முதலில் ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஒரு வாடிக்கையாளருக்கு ரத்த காயமே ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் பயந்து போய் அங்கிருந்து சிதறி ஓடினர்.

இதையடுத்து ரத்தக் காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஒருவாடிக்கையாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காயமடைந்த ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பாக CCTV காட்சிகளைக் கைப்பற்றி பரங்கிமலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

பிரியாணி கடைகளில் சப்ளையர்களா பணிபுரிபுவர்கள் நம்மிடம் மிகுந்த பணிபுடன் எக்ஸ்கியூஸ்மி என்ன சாப்பிடறீங்க என்று கேட்கிறார்கள். ஆனால் நமக்கான உரிமையை கேட்கும்போது ரவுடிகளாக மாறிவிடுகிறார்கள். ஒருவேளை வாடிக்கையாளரே பிரச்சனை செய்திருந்தாலும் காவல்துறைக்கு தகவல் அளித்து முறையாக புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதைவிட்டு கொலை வெறி தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது என பொதுமக்கள் கேட்கிறார்கள்.