எடப்பாடியாரை வழி அனுப்ப துப்பாக்கியுடன் சென்ற அதிமுக பிரமுகர்! கண்டுபிடித்து அதிர்ந்த அதிகாரிகள்! விமான நிலையத்தில் பதற்றம்!

சென்னை விமான நிலையத்திலிருந்து முதலமைச்சரை வழியனுப்ப துப்பாக்கியுடன் வந்த அமைச்சரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் பயணிக்க விமான நிலையம் வந்துள்ளார். அப்போது அவரை வழியனுப்ப அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமான நிலையத்தில் ஒன்றுகூடி இருந்தனர்.

இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகள் விமான நிலையத்திற்குள் வரும் வரும் அனைவரையும் சோதனை செய்த பின்னரே விமான நிலையத்திற்குள் அனுமதித்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் என்பவரை சோதனையிட்டபோது அவர் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவரை உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் காவல் துறையில் தன்னிடம் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி மற்றும் அதற்கான சான்று இருப்பதாக காவல்துறையினரிடம் ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தற்போது வரை அதற்கான சான்றுகள் மற்றும் அனுமதி இருப்பதை சமர்ப்பிக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரிடம் முதலமைச்சரை பார்க்க வரும்போது எதற்காக துப்பாக்கி எடுத்து வரவேண்டும் என்ற கோணத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினர் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான சான்றுகளை காவல் நிலையத்தில் சமர்ப்பித்த பின்னரே அவரை விடுவிப்பதாக மற்றும் அவர் மீது எந்த வழக்கும் போடப்பட மாட்டாது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விமான நிலையத்தின் முதலமைச்சரை காண துப்பாக்கி எடுத்து வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.