விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவாரா? சற்று முன் பிரேமலதா வெளியிட்ட தகவல்!

சென்னை விமானநிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த செய்தியாளர் சந்திப்பு:


அதிமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளும் அமோக வரவேற்பு இருக்கிறது என்ற அவர்  40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்.

திமுகவிற்கு சாதமான கருத்து கணிப்புகள் வெளியாகிறது என்ற கேள்விக்கு கருத்து கணிப்பு என்பது கருத்து திணிப்பு என பதிலளித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பாணியில் பிரச்சாரம் மேற்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு

நான் இதுற்கு முன்பு இதே போல் தான் பிரச்சாரம் மேற்கொண்டேன்,  அவர்கள் இல்லாத்தால் எல்லாருக்கும் புதிதாக தெரிகிறது என்றார்.

மேலும் பிரச்சாரம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வருவாரா என்ற கேள்விக்கு வருவார் என்றார்.

பேட்டி: பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக பொருளாளர்)