சன் டிவி சீரியல் சாம்ராஜ்யத்தை ஆட்டம் காண வைத்த செம்பருத்தி! வெற்றிகரமான 500வது எபிசோட்!

ஒரு காலத்தில் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதல் ஐந்து தொடரையும் சன் டி.வி.யில் வெளியாகும் தொடர்கள் மட்டுமே பெற்றுவந்தன.


ஜீ தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முதலாக 500 எபிசோடுகளைக் கடக்கும் முதல் தொடர் செம்பருத்தி என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். இதற்கு முக்கிய காரணம் நாயகனாக வரும் ஆதிக்கும் நாயகியாக வரும் பார்வதிக்குமான கெமிஸ்ட்ரிதான் என்பது ரசிகர்கள் கருத்து.

மேலும் ஆதியாக நடிக்கும் கார்த்திக்கிற்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருக்கும் நிலையில், உண்மையிலே அவருக்கும் பார்வதியாக நடிக்கும் ஷபானாவுக்கும் காதல் என்பதும் கூடுதல் சுவாரஸ்யம்.

இத்தனைக்கும் இது நேரடி தமிழ் தொடர் கிடையாது. தெலுங்கில் வெற்றிபெற்ற முத்தமந்திரம் என்ற தொடரைத் தழுவியே எடுக்கப்பட்டு வருகிறது. தெலுங்கைவிட தமிழில் ஹிட் அடித்துள்ளதால், 1000 எபிசோடுகளைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

500வது எபிசோடைக் கடந்திருக்கும் நிலையில், சிறப்பு பாடல் ஒன்று இந்தத் தொடரில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொடர் பார்க்கும் 500 ரசிகர்களுக்கு பரிசு வழங்க முன்வந்திருக்கும் தொலைக்காட்சி மேலும் பல போட்டிகளை நடத்த இருக்கிறதாம்.

இடையில் இயக்குனர் மாற்றப்பட்டதும் விறுவிறுப்பு குறைந்துவிடும் என்று கருதப்பட்ட நிலையில், சன்னுக்குப் போட்டியாக மேலும் சிறப்பாகவே வெற்றி நடை போடுகிறது செம்பருத்தி. சீரியல்களை பொறுத்தவரை சன் டிவி தான் எப்போதும் ராஜாவாக இருந்தது. 

ஆனால் செம்பருத்தி தற்போது தமிழ் சீரியல்களின் ராணியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. சீரியல் நிபுணர் ராதிகாவால் கூட செம்பருத்தியை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது செம்பருத்தி.