ரயில் பெட்டிகளை மருத்துவ வார்டுகளாக புதிய அவதாரம். கொரோனா படுத்தும்பாடு!

நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, அனைத்து ரயில் சேவைகளும் ஏப்ரல் 14 வரை நிறுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில் கொரோனா தாக்குதலுக்கு ஆளான மற்றும் கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களுக்கு சிகிச்சையளிக்க கழிவறை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை அவசர பிரிவு மருத்துவமனையாக செயல்படுத்தும் திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை செய்துள்ளார் . 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றி மருத்துவ சிகிச்சை அளிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டதில். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தப்படும் வென்டிலேட்டர்கள் மற்றும் படுக்கைகள் போன்ற உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும்.

கழிவறைகளைக் கொண்ட ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாகப் பயன்படுத்தும் திட்டம் எந்தெந்த இடங்களில் நடைமுறைப்படுத்த உள்ளது மற்றும் அந்த பகுதிகளுக்கு ரயில் பெட்டிகளை எப்படி எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல காரணிகளீ பரிசீலிக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கொரோனா பரவலை தடுப்பதற்காக, ஏற்கனவே அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸின் பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கிராமங்கள் அல்லது மிகவும் பிந்தங்கிய சூழலில் உள்ள கிராமங்களுக்கு கழிவறைகளுடன் கூடிய ரயில் பெட்டிகளை தீவிர சிகிச்சை பிரிவு வார்டாக மாற்ற. பஞ்சாப்பில் இயங்கி வரும் ரயில்வே தொழிற்சாலைக்கு ஐசோலேஷன் வார்டாக மாற்றும் பணியும் சென்னையில் இயங்கி வரும் ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு வெண்டிலேட்டர்களைத் தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது.