சந்திராயன் 2 நிகழ்த்திய அடுத்த சாதனை! உலகமே ஆச்சர்யப்படும் நிகழ்வு. விரைவில் நிலவில் தரை இறங்கும் சாதனை!

நிலவின் புவி வட்டபாதையை அடைந்த சந்திராயன் 2, உலக நாடுகள் இந்தியாவை பார்த்து மூக்கின்மேல்விரல், நிலவில் தரையிறங்கும் நிகழ்வில் மோடி பங்கேற்பு.


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து 3,80,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலவை அடைய 3,850 கிலோ எடையுடன் சந்திராயன் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஜூலை 22ம் தேதி புறப்பட்டுச் சென்றது. சந்திராயன் 2 செயற்கைக்கோள் புவியின் நீள்வட்டப் பாதையில் 23 நாட்கள் வட்டமடித்தது.

தற்போது பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் சந்திராயன் 2 திரவ என்ஜின் இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை வேகத்தை மாற்றியமைத்து நிலவின் சுற்றுவட்டபாதையில் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் வட்டமடிக்கச் செய்தனர். இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்..

நிலவின் புவி வட்டப்பாதையில் 13 நாட்கள் வட்டமடிக்கும் சந்திராயன் 2 அடுத்த 4 நாட்களில் நிலவின் தரையிங்கும் பிரதான பணியை மேற்கொள்ளும்.  28 நாட்கள் பயணத்திற்கு பின்னர் தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றும் இந்த விக்ரம் லேண்டர் செப்டம்பர் 2ம் தேதி பிரிந்து பின்னர் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

தற்பேதாது முதலில் செயற்கைக்கோளில் இருந்து பிரிந்து நிலவில் சுற்றுவட்டப்பாதையில் வட்டமடிக்கும் சந்திராயனில் உள்ள ஆர்பிட்டர் முப்பரிமாண படங்களை எடுப்பது, நீர்மூலக்கூறுகளை ஆராய்வது, கிடைக்கின்ற தகவல்களை பூமிக்கு அனுப்புவது போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

பின்னர் ஆர்பிட்டரில் இருந்து பிரியும் 1,478 கிலோ எடைகொண்ட லேண்டர் விக்ரம் எனப்படும் பொருள் நிலவில் தரையிறங்கும். இந்த லேண்டரானது சமநிலையை காத்து சரியான, பாதுகாப்பான இடத்தில் தரையிறக்கும். 

லேண்டர் தரையிறங்கிய பின்னர் அதில் இருந்து வெளியில் வரும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள ரோவர் கருவி சூரிசக்தியில் இயங்கக்கூடியது, படங்களை எடுக்கும் பணியையும், வேதிப் பொருட்களை கண்டறியும் பணியையும் மேற்கொள்ளும்.

லேண்டரில் இருந்து வெளியே வரும் ரோவர் அடுத்த 15 நிமிடங்களில் அரைகிலோ மீட்டர் தூரம் வரை சென்று படங்கள் எடுக்கும் பணியை மேற்கொள்ளும். இந்த ரோவர் 14 நாட்கள் மட்டுமே சூரியசக்தியிலேயே இயங்கக்கூடியது. அதாவது பூமியை பொறுத்தவரை 14 நாட்கள் என்பது நிலவுக்கு ஒருநாள் மட்டுமே.

ரோவர் எடுக்கும் புகைப்படங்கள் நேரடியாக பூமிக்கு அனுப்பமுடியாது. முதலில் லேண்டர் விக்ரமுக்கு அனுப்பப்பட்டு பின்னர் ஆர்பிட்டருக்கு அனுப்பப்பட்டு அதன் பின்னர்தான் பூமியை சென்றடையும். 

நிலவின் தென்துருவம் மிகக் கரடுமுரடானது என்பதால் ரோவரில் சாதாரண வகையில் சக்கரங்கள் பொருத்தாமல் மிகவும் லாவகமாக பள்ளம் மேட்டில் சாயாமல் செல்வதற்கான பிரத்யேக சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.