ஜெயலலிதா பாணியில் அரசு ஊழியர்களை அவுட் ஆக்கிய சந்திரசேகர் ராவ்! அடுத்து என்ன நடக்கப் போகிறது?

எம்ஜிஆர்.ஜெயலலிதா பாணியில் அரசு ஊழியர்களை அடக்கி ஆள்கிறார் சந்திர சேகர் ராவ்.! என வர்ணிக்கிறது இந்திய ஊடகங்கள்.


சமீபத்தில் ஒன்றினைந்த ஆந்திராவுடன் இருந்து பிரிந்து சென்று தெலுங்கானா மாநிலமாக உருவெடுத்து தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சில தினங்களாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

ஆம் மாநிலத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென்று தொடங்கியுள்ள வேலை நிறுத்தத்தினால் ஒட்டுமொத்த தெலுங்கானாவும் ஸ்தம்பித்து போய் உள்ளது.

ஊதிய உயர்வு சலுகைகள் மற்றும் போக்குவரத்து கழகத்தை தெலுங்கானா அரசுடன் இணைப்பது போன்ற 26 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் மாநில அரசு தொழிற்சங்கத்துடன்‌ பேச்சுவார்த்தை நடத்த முன்வராத நிலையில். சுமார் 2500 தனியார் பேருந்துகள் மூலம் போக்குவரத்து துறை போராட்டத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளார் முதல்வர் சந்திரசேகர ராவ். அதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு தமிழகத்தில் இதேபோன்ற போக்குவரத்து தொழிலாளர்கள் போராடிய வேளையில். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்கொண்ட விதம் போல தற்போது சந்திரசேகர் ராவும் செயல்படுகிறார் என வர்ணிக்கின்றன பல்வேறு ஊடகங்கள்.

2003ம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்கள் மட்டுமின்றி கிட்டத்தட்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதிநிதித்துவ தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பண சலுகைகளை திரும்பப் பெறுவதை எதிர்த்து போராட்டத்தை அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இப்போராட்டத்தை முதலில் அமைதியாக கையாண்ட அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, பின்னர் பெரும் சூறாவளியாக சுழன்று ஆர்ப்பாட்டங்கள் தீவிரமாகிய வேளையில், அரசு ஊழியர்கள் கைதுகள்,

ஊழியர்களுக்கு எதிரான வழக்குகள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிநீக்கம் ஆகிய நடவடிக்கைகள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களைப் பிளவுபடுத்தி, அவர்களிடையே பிரிவினையை உருவாக்கினார்.  

போராட்டங்களின் இரண்டாவது நாளில் சுமார் 2,500 தலைமைச் செயலக ஊழியர்களை பணிநீக்கம் செய்ததது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த 20 நாட்களில், எஸ்மா சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

போராட்டத்தின் இரண்டாவது வாரத்தில் போராட்டக்காரர்களுக்கு மீண்டுமொரு எச்சரிக்கை விடுத்தார். மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் 2 சதவிகிதம் மட்டுமே உள்ள உங்கள் கோரிக்கைகளுக்காக 98 சதவிகித மக்களின் நலன்களை புறக்கணிக்க முடியாது என்று வீராவேச உரையாற்றினார். 

அடுத்ததாக மூன்றாவது வாரத்தில், சுமார் 80 தொழிற்சங்கங்கள் தங்கள் தொழிளாலர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் 150 பத்திரிகையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஊடகங்கள் அனைத்தும் ஜனநாயகத்தின் தூண்கள் என்று கருதப்பட்ட வேளையில்.

இந்த தூண்களை அசைத்து மூலம் இந்த இரண்டு துறையும் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை செய்ய உந்தப்பட்டது என்றும் இந்த ஒரு காரணமாகவே அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்டார் என்று சுட்டிக்காட்டுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஜெயஸ்ரீ.

அதற்கு முன்பாக 1978 ஆம் ஆண்டில் இதேபோல், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, ​​அப்போதைய முதலமைச்சர் எம்ஜி ராமச்சந்திரன் தனியார் ஓட்டுநர்களை அழைத்து. உடனடியாக உரிமங்கள் வழங்கி வாகனங்களை இயக்க சொன்னார், ஆனால் அப்போதைய, வேலைநிறுத்தத்தை தடை செய்ய எஸ்மா சட்டத்தை பயன்படுத்தினாலும். யாரையும் வேலையில் இருந்து நீக்கவில்லை,

இதேபோல் கடந்த தெலுங்கானா தலைநகர் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் தொடங்கிய வேலை நிறுத்தத்தை பற்றி பேசிய சந்திரசேகர் ராவ் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்றும். நஷ்டத்தில் இயங்கும் தெலுங்கானா போக்குவரத்து துறையை மீண்டும் லாபம் ஈட்டுவதை உறுதி செய்யவே அரசு முன்னின்று செயல்படுவதாகவும்.

ஏற்கனவே போக்குவரத்து துறை ஆண்டுக்கு ரூ. 1,200 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்றும், மற்றும் அதன் மொத்த நஷ்டம் சுமார் 5,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகவும். அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் ஒரு சுமையாக மாறிவருகையில், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது நெறிமுறையற்றது மற்றும் சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவிக்கும் ஊடகத்துறையினர், ​​தெலுங்கானா முதலமைச்சர், விவசாயிகளின் பிரச்சினைகளை கையாண்ட விதம் மற்றும் புதிய தலைமைச் செயலகத்தை நிறுவ அவரெடுத்த நடவடிக்கை பொதுமக்களிடமிருந்து வரவேற்பைப் பெறவில்லை என்பதால் அவருக்கு சாதகமான பொதுக் கருத்து மாநிலத்தில் நிலவவில்லை என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.  

மேலும் இந்த பிரச்சினையில் திட்டவட்டமான நிலைப்பாடுகள் மூலமும், அரசியல் ரீதியாக மட்டுமே தீர்வு ற முடியும் என்று தெரிவிக்கிறார்,

தற்போதைய தெலுங்கானா முதலமைச்சரின் நடவடிக்கைகள் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை ஒத்து சந்திரசேகர் ராவ் பெரும்பாலும் எதேச்சதிகாரமாக செயல்படுவதாக சுட்டிக்காட்டுகிறார் முன்னாள் பத்திரிகையாளரான ஜெயஸ்ரீ பாலசுப்பிரமணியன்.

ஆனால் மாநிலத்தில் உள்ள பொதுமக்கள் பேருந்துகள் இயக்கப்படாதது பற்றிய கவலையில் ஆழ்த்தியுள்ளனர். அதே வேளையில் அரசு ஊழியர்கள் மீது பொது மக்களிடம் போதுமான அனுதாபம் இல்லை என்றே கூறப்படுகிறது, அம்மாநில மக்களின் மனநிலையோ. போராட்டக்காரர்கள் குறைவாக வேலை செய்து அதிக சம்பளம் வாங்குகின்றனர் என்கிற எண்ணத்தில் உள்ளனர் என்றும். இந்த எண்ணம் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும் எனவும்.

எங்கள் போராட்டத்தின் நோக்கத்தின் நிலையைப் பற்றி சந்திரசேகர் ராவ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும், பின்னர் அரசு தொழிற்சங்க விதிமுறைகளின்படி உட்கார்ந்து பேசி. கோரிக்கைகள் நியாயமாக இருக்கும்பட்சத்தில் ஊழியர்களின் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பல்வேறு துறைகளின் வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர் போராட்டக் குழுவினர்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவிற்கு எதிராக முதலமைச்சர் துக்ளக்கைப் போலவும், ஹிட்லரைப் போலவும் நடந்து கொள்கிறார். அவர் எங்களுக்கு இந்த வேலைகளை வழங்கவில்லை, பின்னர் அவர் எங்களை எவ்வாறு வேலையை விட்டு நீக்க முடியும்?

ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக நாங்கள் போராடுகிறோம். சந்திரசேகர் ராவின் இந்த எச்சரிக்கை ஒரு கோழைத்தனமான முடிவு,இது யாருக்கும் பயனளிக்காது போன்ற பதாகைகள் ஏந்தி தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போக்குவரத்து துறை ஊழியர்கள்.

தெலுங்கானா அரசின் அறிக்கையின் ஒன்று, தற்போது 10,400 பேருந்துகள் தெலுங்கானா போக்குவரத்து கார்ப்பரேஷனில் உள்ளது, எதிர்காலத்தில் 50 சதவீத பேருந்துகள் TSRTC கழகத்திற்கு சொந்தமானதாக மாறும் என்றும், அதே நேரத்தில் 30 சதவீதம் பேருந்துகள் வாடகைக்கு இயக்கப்படுவதாகவும், மீதமுள்ள 20 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிற்சங்கத் தலைவர். தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழகம், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 48,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான மாநில அரசாங்கத்தின் முடிவை சவாலோடு எதிர்க்க காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்,

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசாங்கத்திடமிருந்தோ அல்லது டிஆர்டிசி நிர்வாகத்திடமிருந்தோ பணிநீக்கம் அல்லது இடைநீக்க அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று தெலுங்கானா மஸ்தூர் யூனியன் தலைவர் இ.அஸ்வதாம ரெட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கானாவில் டி.எஸ்.ஆர்.டி.சி பஸ் வேலைநிறுத்தம் காரணமாக, பயணிகளிடமிருந்து அதிக டிக்கெட் வசூலிக்கும் தனியார் பஸ் நிறுவனங்கள் மீது போக்குவரத்துத் துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தனியார் பேருந்துகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 351 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெலுங்கானா போக்குவரத்து துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 179 வழக்குகளையும், சனிக்கிழமை இரவு 172 வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர். சாலை வரி செலுத்தாதது மற்றும் அனுமதி இல்லாமல் இயங்கியதற்காக எட்டு பேருந்துகள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்கும் வகையில் ஆந்திர மாநில சாலை போக்குவரத்துக் கழக (ஏபிஎஸ்ஆர்டிசி) பேருந்துகளை ஏற்பாடு செய்யுமாறு போக்குவரத்து ஆணையர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

மணியன் கலியமூர்த்தி