சந்திரசேகர ராவுக்கு ஆப்பு வைக்க கிளம்பும் சந்திரபாபு நாயுடு! துணை முதல்வர் கேட்கும் மாயாவதி!

இந்தத் தேர்தலில் மோடிக்கும், ராகுலுக்கும் நிச்சயம் பெரும்பான்மை கிடைக்காது என்பதால், மூன்றாவது அணிதான் ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறார் சந்திரசேகர ராவ். இன்னொரு வகையில் சொல்வது என்றால் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அணியைத் திரட்டுகிறார்.


இதற்காகத்தான் ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்கு சந்திரசேகரராவ் முயற்சி மேற்கொண்டார். ஆனால், அவரது ஆர்வத்தை தடுத்து நிறுத்தினார் ஸ்டாலின். இப்போது அவரை சந்திப்பதும், மோடிக்கு ஆதரவு தருவதும் ஒன்றுதான் என்பதால் அமைதியானார்.

சந்திரசேகர ராவ் நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் என்றே இப்போது சந்திரபாபு நாயுடு அடுத்த பயணத்தைத் தொடங்கிவிட்டார். மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்யும் அடுத்த கூட்டத்தில் கலந்துகொண்டு அனைவரையும் காங்கிரஸ் பக்கம் இழுக்க நினைக்கிறார் நாயுடு.

மம்தாவுக்கு பதவி இருப்பதால் அவர் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒப்புக்கொள்வார் என்றே தெரியவந்துள்ளது. ஆனால், மாயாவதிக்கு ஆசை அதிகமாக உள்ளது. மத்திய அமைச்சர் பதவி வேண்டாம், குறைந்த பட்சம் துணை முதல்வர் பதவி கொடுத்தால் காங்கிரஸ்க்கு ஆதரவு தருவதாக தெரிவித்து இருக்கிறாராம்.

மாயாவதிக்கு துணை முதல்வர் கொடுத்தால், அதே போன்று ஒரு பதவியை முலாயமும் எதிர்பார்ப்பதுதான் சிக்கல். மேலும் மம்தாவும் இதே பஞ்சாயத்தை எழுப்பி, கேபினட்டில் பெரிய இடம் கேட்பார். 

இந்த பஞ்சாயத்துக்களை எல்லாம் முடிவு கட்டத்தான் மீண்டும் பயணம் மேற்கொள்கிறாராம் நாயுடு. மோடிக்காக சந்திரசேகர ராவும், ராகுலுக்காக சந்திரபாபு நாயுடுவும் பயணம் செய்துவருகிறார்கள். யாருடைய முயற்சி பலிக்கும் என்பது மே 23 அன்று தெரிந்துவிடும்.