டெல்லியில் இருந்து சென்னைக்கு ஓடோடி வந்து ரஜினிக்கு நன்றி சொன்ன மத்திய அமைச்சர்! பரபரப்பு பின்னணி!

பாஜக தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த ரஜினிக்கு நன்றி தெரிவிக்க டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் ஒருவர் ஓடோடி வந்துள்ளார்.


மத்தியில் ரயில்வேதுறை அமைச்சராக இருப்பவர் பியூஸ் கோயல். இவர் தான் அமித் ஷாவின் வலது கரம். பாஜகவின் பொருளாளராகவும் உள்ளார் பியுஸ் கோயல். இன்று திடீரென சென்னை வந்த அவர் பேசியாவது:-

மக்கள் இந்த கூட்டணிக்கு சிறந்த வரவேற்பையும் ஆதரவையும் கொடுப்பார்கள் என நம்புகிறோம்  மீண்டும் ஆட்சியமைக்கும்போது தமிழக மக்களின் குரல்களுக்கு உரிய முக்கியத்துவம் இருக்கும். தேர்தல் அறிக்கையில் தமிழக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

நதிகள் இணைப்புக்கு முந்தைய வாஜ்பாஸ் ஆட்சியின் போது பணிகள் துவங்கப்பட்டது ஆனால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் அவை கிடப்பில் போட்டுவிட்டனர் . காவிரி கோதாவரி இணைப்பின் மூலம் தென் மாநில குடிநீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். சென்னையில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கவும் குறுகிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்

விவசாயிகளின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காணப்படும் நடிகர் ரஜினிகாந்த் நதிகள் இணைப்பு அறிவிப்பை வரவேற்றிருக்கிறார் , அவருக்கு நன்றி அனைத்து விவசாயிகளுக்கும் ஆறாயிரம் ரூபாய் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அய்யாகண்ணு  அமித்ஷாவை சந்தித்த போது விவசாயிகளுக்கும் பென்சன் முறை அமல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார் 

தீவிரவாதத்திடமிருந்தும் தீவிரவாத தாக்குதளில் இருந்தும் நாட்டை பாதுக்காக்க இந்தியாவிற்கு வலிமையான அரசாங்கமும் தலைவரும் தேவைபடுகிறது எதிர்கூட்டணி வேட்பாளர்கள் தயாநிதிமாறன் , ஆ.ராசா , கார்த்தி சிதம்பரம் போனாறவர்கள் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு வருபவர்கள் . மக்கள் இதுபோன்ற வேட்பாளர்களை ஏற்கவே மாட்டார்கள்.  மக்கள் எதிர்பார்க்கும் ஊழலற்ற சுத்தமான ஆட்சியை மோடியால் மட்டுமே கொடுக்கப்படும். நாடும் நமதே நாற்பதும் நமதே

இவ்வாறு அவர் கூறினார். என்னதான் வந்து பியூஸ் கோயல் சென்னை வந்து இவ்வளவு பேசினாலும் அவரது வருகையின் நோக்கம் ரஜினிக்கு நன்றி தெரிவிப்பது மட்டும் தானாம்.