7 பேர் சேர்ந்து துன்புறுத்தினர்..! வேவு பார்த்தனர்..! பெட்ரூமில் தூக்கில் தொங்கிய மத்திய அரசு பெண் ஊழியர்..! பதற வைக்கும் காரணம்!

தெலுங்கானா மாநிலத்தில் உயர் அதிகாரிகள் பாலியல் தொந்தரவால் BHEL நிறுவன பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.


மத்தியப் பிரதேசம் போபால் நகரைச் சேர்ந்த பெண் அதிகாரி ஐதராபாத்தில் 'பெல்' நிறுவனத்தில் 'கணக்கு அலுவலராக' பணிபுரிந்து வந்தார். கடந்த வியாழனன்று மியாப்பூர் பகுதியில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் அந்த பெண் அதிகாரி. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மியாப்பூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.  

அந்த பெண் அதிகாரி தற்கொலை செய்வதற்கு முன் அதற்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி வைத்துள்ளார். இதை கைப்பற்றிய போலீசார் அந்த கடிதத்தை படித்து பார்த்தனர். அதில் தனது நிறுவனத்தின் டிஜிஎம் மற்றும் ஆறு சக அதிகாரிகள் தனது மொபைல் போனை ஹேக் செய்து தனது மொபைலில் வரும் போன் அழைப்புகளை வைத்து மிரட்டி தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அவர்கள் பாலியல் தொந்தரவும் செய்ததாக தெரிவித்துள்ளார். இதை அடுத்து அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், அதனால்தான் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதையும் போலீசார் உறுதிப் படுத்தி உள்ளனர்.

இதையடுத்து பெண் அதிகாரியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்குறிப்பிட்ட பொது மேலாளர் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் வரும் அழைப்புகளை வைத்து மிரட்டுகிறார்கள் என்றால் அதற்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அந்த செல்போனில் யார் யார் போன் செய்தார்கள். எதற்காக போன் செய்தார்கள் என்ற விவரங்களையும் சேகரிக்கிறது போலீஸ்.