அலுவலகங்களில் இனி வாட்ஸ்ஆப் பயன்படுத்த தடை..! வருகிறது மத்திய அரசின் புதிய சட்டம்..! அதிர வைக்கும் காரணம்!

சென்னை: அலுவலக பணிகளுக்கு பயன்படும் வகையில் ஜிம்ஸ் ஆப் என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.


இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் தனிப்பட்ட தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி, அரசு, தனியார் அலுவலகப் பணிகளுக்கும் வாட்ஸ் ஆப், டெலிகிராம் போன்றவற்றையே பலரும் பயன்படுத்தி, ஆவணங்களை பரிமாற்றம் செய்துகொள்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் வாட்ஸ்ஆப் பயனாளர்களை பெகாஸஸ் எனும் ஸ்பைவேர் உளவு பார்த்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில், இந்தியாவைச் சேர்ந்த 1,400 விஐபிகளும் பாதிக்கப்பட்டனர். இதனால் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுக்கென பிரத்யேக செயலியை வடிவமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.  

இந்த செயலிக்கு GIMS (Government Instant Messaging System) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒடிசா போன்ற மாநிலங்களில் தற்சமயம் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலி, விரைவில், நாடு முழுக்க அறிமுகம் செய்யப்படுத்தப்பட உள்ளது. இதன்மூலமாக, வெளிநாட்டினர் வடிவமைத்த தகவல் பரிமாற்ற செயலிகளை பயன்படுத்த தேவையிருக்காது, முழுக்க முழுக்க பாதுகாக்கப்பட்ட வசதிகளுடன் இந்தியர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக் கொள்ளலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

கேரளாவில் உள்ள தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre), இதற்கான வடிவமைப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.