மஞ்சள் கலர் புடவை! கையில் செல்போன்! நடந்து சென்ற பெண்ணுக்கு பட்டப்பகலில் நேர்ந்த விபரீதம்!

சென்னையில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


 சென்னை எர்ணாவூரை அடுத்த ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்த வாணி என்பவர் வீட்டில் சமையல் செய்வதற்காக அருகில் உள்ள மளிகை கடைக்கு காய்கறி மற்றும் பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

இதையடுத்து கடையில் பொருட்கள் வாங்கிய பின் தெருவில் தனியாக செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளார்.

இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் பார்த்த பொழுது செல்போனை பறிக்க திட்டமிட்டனர்.

அதன்படி வாகனத்தை வேகமாக இயக்கி அருகில் வந்தவுடன் செல்போனை பிடித்து இழுக்க முயன்றபொழுது வாணி சுதாரித்துக் கொண்டார்.

நல்லவேளையாக செல்போன் கொள்ளையர்களிடம் சிக்காமல் போக வாணி மட்டும் கீழே விழுந்து சிறு காயங்களுடன் தப்பி விட்டார்.

இதை அடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.