நடு ராத்திரி! நிர்வாண வீதி உலா! சென்னையை மிரட்டும் இருட்டு மனிதன்!

சென்னை கொடுங்கையூரில் அதிகாலை நேரங்களில் கையில் கைத்தியுடன் நிர்வாணமாக ஒரு நபர் சுற்றித் திரிவதாக பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


சில தினங்களுக்கு முன்னர் போரூர், வளசரவாக்கம் பகுதிகளில் நள்ளிரவில் நிர்வாண கோலத்தில் சுற்றித்திரிந்த கொள்ளையன் ஒருவரை போலீசார் தேடி பிடித்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் பகுதியிலும் ஒரு நபர் ஒரு ஆடை கூட அணியாமல் அதிகாலையில் சாலையில் வேகமாக நடந்து செல்வதாக பெண்கள் தெரிவித்தனர்.

மேலும் கையில் கத்தியுடன் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் செல்வதாகவும் குறிப்பிட்ட அவர்கள், முக்கியமாக அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து அவனை பிடிப்பதற்காக ஆண்களும் அவனை பிடிப்பதற்காக அதிகாலையில் நோட்டமிட்டனர்.

ஆனால் அந்த நபர் சிக்கவில்லை. இதற்கிடையே அந்த நபர் குறித்து கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாண கோலத்தில் நடந்து சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவனை தேடி வருகின்றனர். மற்ற வழக்குகளில் சிசிடிவியை வைத்து 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடிக்கும் போலிசார் நடந்து சென்றவனை இன்னும் பிடிக்கமுடியவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூக்கத்தில் நடக்கும் வியாதி சிலருக்கு இருப்பது போல, உடலுறவு கொள்ளும்போது நடக்கும் வியாதி உள்ளதோ என்னவோ இவனுக்கு?