சி.பி.ஐ. இப்போ கெட்டுப் போச்சு! சொன்னது யாரு தெரியுமா? தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

சி.பி.ஐயின் முதல் இயக்குநராக இருந்தவர் -டி.ப்.கோஹ்லி.


1963 எப்ரல் 1முதல் 1968 மே 31வரை கோஹ்லி சி.பி.ஐயின் இயக்குநராக இருந்தார். அவரது நினைவாக சி.பி.ஐ நடத்தும் சொற்பொழிவில் நேற்று இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்துகொண்டு பேசியபோது சி.பி.ஐயின் செயல்பாடு பற்றி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற ஒருகருத்தைச் சொன்னார் திரு ரஞ்சன் கோகாய்.

இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த விழா நேற்று புதுடெல்லியில் நடந்தத இந்த விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கல்ல்ந்து கொண்டார்.இந்தியாவில் உள்ள நுண்ணறிவு ஏஜென்சிகளில் சி.பி.ஐ கடந்தகாலத்தில் தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பிடித்து இருக்கிறது. பெரும்பாலான வழக்குகளில் அது மிகத்திறமையாகச் செயல்படுகிறது.

அதே சமயம் ,அதிகாரம் மிக்கவர்கள், அரசியல் பின்புலம் கொண்டவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சி.பி.ஐயின் செயல்பாடு அதன் தரத்திற்கு ஏற்றதாக இல்லை, என்பதே உண்மை.இது போன்ற செயல்பாடுகள் மீண்டும் மீண்டும் நடக்காமல் இருப்பது அவசியம். இது சி.பி.ஐயின் நம்பகத் தன்மையையும்,அதன் கட்டமைப்பையும் பாதித்துவிடும்.

அரசியல் சாயமில்லாத வழக்குகளில் மட்டும் சி.பி.ஐயால் சிறப்பாக செயல்பட முடிவது என்று பாராட்டுவது போல பாராட்டி சி.பி.ஐயை மறைமுகமாக கேலி செய்தார்.உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் இந்தப் பேச்சு டெல்லியில் பல பேரை டென்ஷனாக்கி இருக்கிறது. இதற்கு எந்தத் தரப்பில் இருந்து பதில் வரும் என்று நீதிமன்ற வட்டாரம் ஆவலாகக் காத்திருக்கிறது.