பொள்ளாச்சி பெண்கள் வீடியோ! திமுக மா.செ மகனுக்கு தொடர்பு? பரபரப்பு தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகரின் மகன் மற்றும் பார் நாகராஜன் ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.


பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை தங்கள் வலையில் வீழ்த்திய ஒரு கும்பல் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து செய்து வந்த கும்பல் தற்போது இளம்பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த கொடூர சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு வந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் மேலும் பல பெண்களை  பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அதன் அடிப்படையில் பலருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பி வருகின்றனர்.  நக்கீரன் கோபால், மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில்  தொடர்ந்து

இன்று திமுக பிரமுகர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறனுக்கும், பார் நாகராஜனுக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 28-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.