2 முகங்களுடன் பிறந்த அதிசய பூனைக் குட்டி ஒன்றை கால்நடை மருத்துவர் ரால்ப் டிரான் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்
இரண்டு தலைகள்..! நான்கு கண்கள்..! காண்போரை அதிர வைக்கும் பூனை குட்டி! எங்கு தெரியுமா?

அரிய நிலையில் பிறந்த இந்த பூனைக்குட்டியை டிப்ரோசோபஸ் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். அதாவது அந்த இரண்டு முகங்கள் உள்ளன. எனினும் பூனைக்குட்டி மற்ற பூனைகள் போலவே ஆரோக்கியமான கடந்த 4 மாதங்களாக வாழ்ந்து வருகிறது. தற்போது அந்த பூனை இரு வாய்களாலும் சாப்பிடுவதாக கால்நடை மருத்துவர் ஆச்சரியத்துடன் கூறுகிறார்.
பல பூனைகளை கால்நடை மருத்துவர் ஒரு நாள் தத்தெடுத்தபோது டிப்ரோசோபஸால் பாதிப்பு ஏற்பட்ட அந்த பூனையையும் தத்தெடுத்துள்ளார். ஆரம்பத்தில், பூனைக்குட்டிக்கு உணவளிப்பது கடினமாக இருந்துள்ளது. ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் குழாய் மூலம் பூனைக்கு உணவளிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
பூனைக்குட்டியின் மையக் கண், மயக்க மருந்துக்கு போதுமான எடை அதிகரித்த பின்னரே அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஒரு முகத்தை அகற்ற திட்டமிட்டுள்ளார். 2 முகமும் சாப்பிட விரும்புவதாகவும், ஒரு முகம் சாப்பிட்டு முடியும் வரை மற்ற முகம் காத்திருப்பது இல்லை என்றும் மருத்துவர் தெரிவிக்கிறார். பூனைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு இன்னும் 300 கிராம் அல்லது அதற்கு மேல் எடை இருக்க வேண்டும் எனவும் மருத்துவர் தெரிவிக்கிறார். இந்த பூனை வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.