ஹீரோயின் ஆக்குவதாக மாடல் அழகியுடன் உல்லாசம்! வீடியோவும் எடுத்து மிரட்டிய டைரக்டர்!

தன்னிடம் பேசுவதை மாடல் அழகி தவிர்த்ததால், பிளாக் மெயில் செய்த காஸ்டிங் இயக்குனர் கைது செய்யப்பட்டார்.


மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த 47 வயதான கேஸ்டிங் இயக்குனர் ஒருவரும் மாடல் அழகியும் கடந்த மார்ச் மாதம் செய்து கொண்டனர். இருவரும் நெருங்கி பழகி வந்த சூழலில் திடீரென ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்து இணைப்பையும் துண்டித்து உள்ளனர். இடையில் சில நாட்கள் பேசாமல் இருந்த கேஸ்டிங் இயக்குனர் பின்னர் மாடல் அழகியுடன் பேச முயன்றார்.

ஆனால் அந்த மாடல் அழகி கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த கேஸ்டிங் இயக்குனர், அந்தப் பெண் தன்னுடன் பழகிய காலகட்டத்தில் எடுத்துக் கொண்ட அந்தரங்க வீடியோக்களை அந்த பெண்ணிற்கு அனுப்பி பிளாக்மெயில் செய்தார். இதனால் அஞ்சிய அந்தப் பெண் ஒசிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து கேஸ்டிங் இயக்குனரை கைது செய்த போலீசார் அவர் மீது பாலியல் அத்து மீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது செல்போனில் உள்ள பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள் அவை கிடைத்தவுடன் வழக்கை தீவிரமாக கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.