பாஸ் மார்க் வேணுமா? அப்போது தனியா வந்து பார்! பேராசிரியரின் டபுள் மீனிங் ஸ்பீச்! மாணவி எடுத்த விபரீத முடிவு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாதி ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பேராசிரியர் மீது புகார் கூறிய கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசினர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார கிராம ஏழை, நடுத்தர மாணவ, மாணவிகள் தங்கள் எதிர்கால கனவுகளுடன் படித்து வருகின்றனர். அரசினர் கல்லூரியில் ஆலமன் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கவுசல்யா என்கிற மனைவியும் படித்து வருகிறார்.

முதுகலை பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவி மதிப்பெண்களுக்கு ஆதாரமாக இருக்கும் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையை முடித்து பேராசிரியர் ரவிச்சந்திரனிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால் அதை அவர் முழுமையாக படிக்காமல் ஆராய்ச்சி கட்டுரையில் நிறைய பிழைகள் இருப்பதாக கூறி தட்டிக் கழித்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம் மாணவி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் சாதி அடிப்படையில் அந்த மாணவியின் ஆராய்ச்சி கட்டுரையை வேண்டுமென்றே குறை கூறி ஏற்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசச் சென்ற போது தன்னை தனியாக வந்து சந்திக்குமாறு பேராசிரியர் கூறியதாக மாணவி வேதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆராய்ச்சி கட்டுரை ஏற்குமாறு பல முறை கேட்டும் ஏற்க மறுத்ததும் மட்டும் இன்றி சாதி ரீதியாகவும் கொச்சைப்படுத்தி பேசியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி நேற்று கல்லூரி ஆய்வகத்திற்கு சென்று அங்கிருந்த ஒரு ரசாயணத்தை எடுத்து குடித்து விட்டடார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ரசாயனம் குடித்து மயங்கி விழுந்த மாணவி கும்பகோணம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

இது தொடர்பாக மாணவி அளித்த பேட்டியில் பேராசிரியர் ரவிச்சந்திரன் தனது ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொள்ளாமல் தட்டிக்கழித்தார். மேலும் சாதி ரீதியாக தன்னை புறக்கணித்தது மட்டும் இன்றி சாதி ரீதியாக துன்புறுத்தி மன உளைச்சலை ஏற்படுத்தினார். பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்.

இது குறித்து மாணவியின் தாய் தனது மகளை சாதி ரீதியாக துன்புறுத்தி மன உளைச்சலை ஏற்படுத்திய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மாணவி தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

சாதி மறுப்பு படிக்காதவர்கள் மத்தியில் பார்க்கும்போது அது அவர்கள் வாழும் சூழ்நிலை என சாதரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் முண்டாசு கவிஞன் பாரதி பாடிய சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் பல இடங்களில் இதுபோல் பாகுபாடு காட்டுவதால் இன்னும் எத்தனை மாணவ, மாணவிகள் மனஉளைச்சலுடன் படித்துக் கொண்டிருக்கிறார்களோ என தெரியவில்லை.

எதுவாயினும் ஒரு முறை மட்டுமே வாழும் இந்த உடலை தன்னிச்சையாக மாய்த்துக் கொள்வதை சமுதாயற்கு மட்டும் அல்ல ஊடகங்களுக்கும் உடன்பாடில்லை. சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதி சொன்னது குழந்தைகளுக்குத்தான் பெரியவர்களுக்கு இல்லை என பேராசிரியர்கள் நினைக்கிறார்களோ என்னவோ?