தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு! அழகிரி ஆதரவாளர்கள் 9 பேருக்கு ஆயுள் சிறை! ஜகா வாங்கிய சன் டிவி!

தினகரன் நாளிதழ் வழக்கில் அட்டாக் பாண்டிக்கு ஆயுள் சிறை, அழகிரிக்கு சிக்கல்... தயாநிதிக்காக செய்தியை மறைக்கும் சன் டி.வி.


மதுரை தினகரன் நாளிதழ் மீது கடந்த 2007ம் ஆண்டு அழகிரியின் ஆட்களால் கொடூரத் தாக்குதல் நடந்தது. அப்போது நடந்த வன்முறையில் வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நடந்தபோது அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேரை கீழ்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. 

இதுகுறித்து நடந்த கருணாநிதியின் வாரிசு யார் என்று எடுக்கப்பட்ட சர்வேயை தினகரன் நாளிதழ் வெளியிட்டது. அதாவது ஸ்டாலினுக்கு அடுத்த தலைவராக தயாநிதி மாறனைக் கொண்டுவருவதற்காகவே இந்த சர்வே வெளியிடப்பட்டது என்று அப்போது தி.மு.க.வில் இருந்த அழகிரி கருதினார். அதனால் மதுரை தினகரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்த மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து மாறன் குடும்பத்துக்கும் கருணாநிதி குடும்பத்துகும் கொலைவெறி பகை ஏற்பட்டது. ஆனால், அதன்பிறகு கருணாநிதி குடும்பத்துக்கு தேவையான அளவுக்குப் பணம் கொடுத்ததும், அந்த வருத்தம் மறைந்துபோனது. கண்கள் பனித்தது, இதயம் இனித்தது என்று மாறன்களை அணைத்துக்கொண்டார் கருணாநிதி.

அதன்பின்னர் மாறன் குடும்பத்தார் அடக்கி வாசித்தனர் என்றாலும் தேர்தல் என்றால் தயாநிதி மாறன் இல்லாமல் எதுவும் இல்லை என்றாகிவிட்டது. 

சமீபத்தில்தான் மாறன் குடும்பத்துக்கு பிரச்னைகள் ஆரம்பித்துள்ளன. பி.எஸ்.என்.எல். வழக்கில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் கொந்தளித்தது. அந்த சூடு தணியும் முன்பு, தினகரன் நாளிதழ் வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது.

இந்த நிலையில் ஊழியர்களுக்கு ஆதரவாக செய்தி போடமுடியாது என்பதால், அப்படியொரு நிகழ்ச்சியே நடக்காதது போன்று செயல்படுகிறது சன் டி.வி. மற்ற அனைத்து சேனல்களும் தினகரன் வழக்கை பிரேக்கிங் நியூஸாக கொடுக்க, சன் தொலைக்காட்சி மட்டும் கண்டுகொள்ளவே இல்லை.

ஆஹா... இதுதான் சன் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு செய்யும் மரியாதை