மனைவியின் மகளுக்கு கணவன் செக்ஸ் டார்ச்சர்! விசாரிக்கச் சென்ற போலீசும் செக்சுக்கு அழைத்த கொடூரம்!

புழல் காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமிக்கு, இன்ஸ்பெக்டரே பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.


இதுதொடர்பாக, சூரபேட் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, இதுபற்றி 2018ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அந்த சிறுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார். அதில், ''நான் 10ம் வகுப்பு படித்துவிட்டு, எனது அம்மாவுடன் வீட்டில் உள்ளேன்.

எனக்கு ஒரு தம்பியும் உள்ளார். இந்நிலையில், எனது தந்தை ஹேமந்த், அம்மாவை விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து, ஜெயகரன் என்பவரை அம்மா, 2வது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் ஒன்று சேர்ந்து அம்பத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கினார்கள். பிறகு, கார், புதுப்புது நகைகள் என சம்பாதித்து, ஜெயகரன் கொடுத்தார். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால், என் அம்மாவுக்கு தெரியாமல் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார். நான் தொடர்ந்து மறுக்கவே, ஒருகட்டத்தில், என் அம்மாவை விட்டுவிட்டு, வேறு ஒரு பெண்ணை ஜெயகரன் சேர்த்துக் கொண்டார். இதனால், எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் மறைந்தது. ஒருகட்டத்தில், ஜெயகரன் வக்கீலை வைத்து மிரட்ட தொடங்கினார்.

மேலும், ரவுடிகளை அழைத்து வந்து எங்களின் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றார். செலவு செய்த பணத்தை தரும்படி அவர் மிரட்டுகிறார். இதுபற்றி எனது அம்மா அம்பத்தூர் போலீசில் புகார் அளித்திருந்தார். பின்னர் வேறு வழியின்றி நாங்கள் சூரபேட் பகுதிக்கு, வாடகை வீட்டிற்குச் சென்றுவிட்டோம்.

ஆனால், அங்கும் ஒரு நாள் ஜெயகரன் மற்றும் அம்மாவின் முதல் கணவர் ஹேமந்த் உள்ளிட்டோர் வந்து தகராறு செய்தனர். இதன்பேரில், எனது அம்மா 100 எண்ணை தொடர்பு கொண்டு புகார் கூறினார். உடனே ,புழல் காவல் நிலைய போலீசார் வந்து, எங்களிடம் சமரசம் செய்தனர். ஜெயகரன் எங்கள் மீது ஆன்லைனில் புகார் கூறியுள்ளதாகக் கூறிய போலீசார், எங்களை தகாத வார்த்தைகளால் பேசினார்கள்.

குறிப்பாக, இன்ஸ்பெக்டர் நடராஜன், என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்தார். இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' எனக் கூறியிருந்தார். தற்போது, இதே புகாரை வைத்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, பாதிக்கப்பட்ட சிறுமி வழக்கு தெரிவித்துள்ளார்.