தெலுங்கானா மாநிலத்தில் கார் ஓட்டுனர் ஒருவர் ஆதரவற்றோரின் இறுதி சடங்கிற்கு அளித்த பண உதவி அவரின் இறுதி சடங்கிற்கு பயன்படுத்தப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவற்றொர் இறுசிச் சடங்குக்கு உதவி தொகை கொடுத்த இளைஞன்! அவரது இறுதிச் சடங்குக்கே பயன்படுத்தப்பட்ட பரிதாபம்! ஒரு அதிர்ச்சி சம்பவம்!

தெலுங்கானா மாநிலத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் விஜய். ஏழ்மையான நிலையில் இருந்தாலும் ஆதரவற்றோரின் இறுதி சடங்கிற்காக தொண்டு நிறுவனம் ஒன்று பணம் வசூலித்து வந்துள்ளது. இந்நிலையில் தனது சிறிய வருமானத்தில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்காமல் தன்னிடம் இருந்த சுமார் 6 ஆயிரம் ரூபாயை ஆதரவற்றோர் இறுதிச் சடங்கிற்காக தொண்டு நிறுவனத்திற்கு அளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த விஜய் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர் எழுதியிருந்த ஒரு கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை தான் சொந்த முடிவில் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதில் எழுதப்பட்டிருந்தது.
இதையறிந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அதே பணத்தை அவரின் இறுதிச் சடங்குக்கு தொண்டு நிறுவனம் பயன்படுத்தியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.