தூக்கக் கலக்கத்தில் ஆக்சலேட்டரை வேகமாக மிதித்த இளைஞர்! நண்பர்கள் 3 பேருடன் எமலோகம் போன பரிதாபம்!

ஈரோடு மாவட்டம் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காரில் சென்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் ஆலத்தூர் மேடு பகுதி அருகே பஞ்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது நிலையில் இரவு பணி முடித்து விட்டு பஞ்சாலையில் வேலை பார்த்து வந்த ஜெய்கணேஷ், கோவிந்தராஜ், தங்கப்பாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆறு நபர்கள் இரவு நேரம் வீட்டுக்கு செல்வதற்காக காரில் பயணம் செய்துள்ளனர்.

அப்போது புஞ்சைபுளியம்பட்டி அருகே கார் சென்று கொண்டிருக்கும்போது இரவு நேரம் என்பதால் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறிது தூரம் சென்ற பிறகு டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக ஓட தொடங்கியது. இந்நிலையில் அதே ரோட்டில் எதிரே வந்த சரக்கு லாரி ஒன்றின் மீது கார் தாறுமாறாக மோதியது இந்த விபத்தில் காரில் சென்ற மூவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து ஏற்பட்டால் உடனே அங்கு மக்கள் கூட்டம் கூடியது இந்நிலையில் படுகாயமடைந்த மூவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .அப்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வீரராகவன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டி வந்த ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளதாகவும், அப்போது ஆக்சலேட்டரை வேகமாக அழுத்தியதையும் உறுதி செய்துள்ளனர்.இதையடுத்து அதனால்தான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். பின்னர் இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.