நிறை மாத கர்ப்பிணி மனைவியுடன் காரில் அதிவேகம்..! நேருக்கு நேர் மோதிய மற்றொரு கார்! விபத்து நிகழ்ந்த இடத்திலேயே பிறந்த குழந்தை..! ஆனால்..?

திருப்பூர் அருகே தனது மனைவியை பிரசவத்துக்காக அழைத்து வந்த கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம். அந்த சோகத்திலும் தனது கணவனின் உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள என்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கவுதம் . கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவருக்கு மணிமேகலை என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இதற்கிடையில், இவரது மனைவி மணிமேகலை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், மணிமேகலையை பரிசோதனை செய்வதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கவுதம் காரில் அழைத்து வந்தார். இவர்களுடன் மணிமேகலையின் சித்தப்பாவும், தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பாரதீய கட்சியின் ஊடக பிரிவு செயலாளருமான கோபால்சாமி, அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் வந்தனர்.

காரை இயக்கிய கௌதம் அவர்கள். திடீரென கார் குண்டடம் பகுதியில் உள்ள மேட்டுக்கடை என்ற இடத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் பாலத்தில் வந்தது. அப்போது எதிரே கோவையில் இருந்து கார் ஒன்று எதிர்பாராத விதமாக 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் எதிரே வந்த காரில் இருந்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் . மேலும், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அனைவரியும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

விபத்த்தில் கவுதம் பலத்த காயம் அடைந்தார். மணிமேகலைக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர் மருத்துவர்கள். எதிர்பாராத விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் டாக்டர் குறித்த 2 நாட்களுக்கு முன்பே மணிமேகலைக்கு பெண் குழந்தை பிறந்தது. கவுதம் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கௌதம் மூளைச்சாவு அடைந்தார்.

மருத்துவர்கள், கௌதம் மனைவியிடம் உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை மறுக்காமல் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க கவுதமின் பெற்றோர், மனைவி ஆகியோர் சம்மதித்தனர். இதன் பின்னர் தமிழ்நாடு உறுப்புகள் தான ஆணையத்தின் அனுமதியுடன் கவுதமின் இருதய வால்வு, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை உடலில் இருந்து அகற்றப்பட்டது.

இதில் சிறுநீரகங்கள், கண்கள், தோல், எலும்பு போன்றவை 9 பேருக்கு தானமாக அளித்து மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். திருமணம் ஆகி 11 மதம் ஆகிய நிலையில் கணவனை இழந்தும் அவரது உடல் உறுப்பை தானம் செய்த மனைவியின் செயல் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் இந்த சோக சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.