காருக்கு அடியில் சிக்கிய மூதாட்டி! 200 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்! பதை பதைக்கச் செய்யும் சிசிடிவி காட்சி!

சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் காரை ஓட்டிய ஒருவனால் நேர்ந்த கோர விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரில் இன்னோவா கார் ஒன்று மின் இணைப்புப் பெட்டி மீது திடீரென மோதியது.  இந்த சப்தம்  ஆதிலட்சுமி என்ற மூதாட்டி அருகில் சென்று பார்த்துள்ளார். திடீரென பின்னோக்கி அதிவேகத்தில் நகர்ந்த கார் ஆதிலட்சுமியின் மீது மோதியது. 

சத்தம் கேட்டு அங்கு மக்கள் கூடினர். உடனே அன்னை சத்யா நகரை சேர்ந்த மோகனகோபால் மற்றும் சரோஜா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர்.   உடனே அந்த இன்னோவா கார் மின்னல் வேகத்தில் , மோகனகோபால் மீது மோதியது.  நிலை குலைந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதை அடுத்து மூதாட்டி சரோஜா மீதும் அந்த கார் மோதியது. அதே  வேகத்தில் சரோஜா காருக்கு அடியில் சென்றுவிட்டார். அப்படியே சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு தரதரவென காருக்கு அடியிலேயே சரோஜா இழுத்துச் செல்லப்பட்டார். காரின் அடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட சரோஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த பதை பதைக்க வைக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த விபத்தை ஏற்படுத்தியவன் .

மண்ணடியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை பொதுமக்கள் நய்யப் புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.