கேப்டன் கெத்தா வருவார்! பிரச்சாரம் செய்வார்! திமுகவுக்கு பீதி கிளப்பும் சின்ன கேப்டன்!

கெத்தா வருவார் , மாஸா வருவார் கண்டிபாக பிரச்சாரம் செய்ய விஜயகாந்த் வருவார் வடசென்னையை கலக்குவார் என அவரது மகன் விஜய பிரபாகர் உறுதி


வடசென்னை பகுதியில் உள்ள கொளத்தூர் , பெரம்பூர் , வியாசர்பாடி ஆகிய இடங்களில் வடசென்னை தேமுதிகவின் நாடாளுமன்ற வேட்பாளர் அழகபுரம் மோகன்ராஜை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது மக்களிடம் பேசிய விஜய பிரபாகர் அவர்கள் :
வடசென்னைக்கு வரத்துக்கு சந்தோஷமாகவும் , பெருமையாகவும் இருக்கு .அப்பாவோட வாகனத்தில் பிரச்சாரத்திற்க்கு வருகிறேன். வரும்போது அப்பாவிடம் வெற்றி பெற்று வருவேன் என சொல்லி வந்து இருக்கிறேன்.

வடசென்னை என்றாலே ஒரு கெத்து வரும் , ஜர்க்கு வரும்.வடசென்னை நமது வேட்பாளர் நடந்து வந்தாளே மத்தவங்க தெரிக்கனும்.வடசென்னை திமுகவின் கோட்டை என சொல்கிறார்கள் ஆனால் இந்த தேர்தலில் அதனை தகர்த்து எறிவோம்.

கண்டிப்பாக பிரச்சாரம் செய்ய கொத்தாக வருவார் , மாஸாக வருவார் ,கண்டிப்பாக பிரச்சாரம் செய்து வடசென்னையை கலக்குவர் என உறுதியாக தெரிவித்தார்.