ரூ.3 லட்சம்! அத்திவரதர் சிறப்பு தரிசனத்திற்கு கேப்டன் கொடுத்த தட்சணை! ஆனந்தத்தில் ஐயர்கள்!

ரூ.3 லட்சம் வரை தட்சணை கொடுத்து தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அத்திவரதரை தரிசனம் செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


யாரும் எதிர்பாராத வகையில் கடந்த வாரம் தனது மனைவி, இளைய மகன் மற்றும் எல்.கேசுதீசின் மனைவி ஆகியோருடன் காஞ்சிபுரம் சென்றார் கேப்டன். அங்கு அத்திவரதரை சிறப்பாக தரிசித்ததோடு மட்டும் அல்லாமல் தனது மகன் நடிக்கும் மித்ரன் படத்திற்கும் சின்ன பூஜையை நடத்திக் கொண்டார்.

கோவிலில் விஐபி தரிசனம் இருந்தாலும் கூட ஒரு நாளைக்கு 500 பேர் மட்டுமே இப்படி அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களும் கூட ஐந்து நிமிடங்களுக்கு மேல் அத்திவரதர் சன்னதியில் அமர அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் கேப்டன் குடும்பம் சுமார் 15 நிமிடங்கள் வரை அத்திவரதரை தரிசித்தனர். மேலும் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த பட்டுப்புடவையை அத்திவரதருக்கு சாத்தினர். மேலும் சினிமா படத்திற்கான பூஜை கூட நடைபெற்றது.

விஜயகாந்த் குடும்பத்திற்கு மட்டும் தற்போது எப்படி அத்திவரதர் தரிசனம் இப்படி சிறப்பாக கிடைத்தது என்கிற கேள்வி எழுந்தது. அப்போது தான் கடந்த ஒரு வாரமாகவே விஜயகாந்த் அத்திவரதர் சன்னதியில் வைத்து தனது மகன் படத்திற்கு பூஜை போட முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அறநிலையத்துறை கூட இந்த விவகாரத்தில் உதவ முடியாது என்று கூறிவிட்டனர். ஏனென்றால் அறநிலையத்துறை அதிகாரிகளின் பாட்சா எப்போதுமே பெருமாள் கோவில்களில் பலிக்காது.

இந்த நிலையில் தான் அத்திவரதர் தரிசன ஏற்பாடுகளை செய்து வரும் ஐயர்களுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை தட்சணை கைமாறியதாக கூறுகிறார்கள். இதன் பிறகே விஜயகாந்தின் கார் குடியரசுத் தலைவர் கார் வந்த இடம் வரை அனுமதிக்கப்பட்டதாம்.