உடல் முழுவதும் கேன்சர் கட்டி! இரண்டு கைகளையும் அகற்றிய டாக்டர்கள்! ஆனாலும் இளம் பெண்ணை திருமணம் செய்த இளைஞன்! நெகிழ வைக்கும் காரணம்!

லண்டன்: ஒரு கை இல்லாமல் உயிருக்குப் போராடும் புற்றுநோயாளியை அவரது காதலன் நம்பிக்கையுடன் திருமணம் செய்துள்ளார்.


இங்கிலாந்தில் உள்ள ஈடன்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர் ஷானன் லின்ச். 21 வயதான இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு  முன்பாக அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், அவரது இடது கையை மருத்துவர்கள் வெட்டி எடுக்க நேரிட்டது. இதையடுத்து, ஒரு கையுடன் தனது வாழ்வை வாழ்ந்து வந்த ஷானன், 2018ம் ஆண்டில் ஆஸ்லி லின்ச் என்ற 18 வயது இளைஞனை சந்திக்க நேர்ந்தது.

இருவரும் உடனடியாக காதலில் விழுந்தனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களின் காதல் வாழ்வில் மற்றொரு பிரச்னை எதிர்ப்பட்டது. ஆம், ஷானனுக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அவர் இன்னும் ஓராண்டு கூட வாழமாட்டார் என மருத்துவர்கள் கெடு விதித்துள்ளனர். இதனால், செய்வதறியாது திகைத்த ஷானனுக்கு, அவரது காதலன் ஆறுதல் கரம் நீட்டியுள்ளார்.

இறப்பதற்கு முன்பாக, ஷானனை திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ வைப்பது என சபதம் மேற்கொண்டார். இதன்படி, கீமோதெரபி சிகிச்சை முடிந்து, தலைமுடி இன்றி மொட்டைத் தலையாகக் காட்சி அளிக்கும் ஷானனை முகம் சுழிக்காமல், தற்போது ஆஸ்லி திருமணம் செய்துகொண்டுள்ளார்.  

  இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் டிரெண்டிங் ஆகியுள்ளது. காதலிக்கு புற்றுநோய் உள்ளது, நீண்ட நாள் வாழமாட்டாள் என தெரிந்தும், அவளுக்கு ஆறுதல் கரம் நீட்டி, திருமணம் செய்துகொண்ட ஆஸ்லியின் தியாக மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.