பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று விட்டு வெளிநாடு சென்ற நடிகர் விஜய் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். அடுத்த படமான தளபதி 64ல் வில்லனாக விஜய் சேதுபதி இடம்பெறுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ஆளும் கட்சியின் கெடுபிடி..! சென்சார் சிக்கல்..! பிகில் வெளியாவதில் பிரச்சனை! விஜய் அவசரமாக நாடு திரும்பியதன் பரபரப்பு பின்னணி!

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழா செப்.19ம் தேதி தனியார் கல்லூரியில் நடைபெற்றது. பின்னர் ஓய்வு எடுப்பதற்காக நடிகர் விஜய் கனடா நாட்டிற்கு கடந்த செப்.20ம் தேதி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜய் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் வெளிநாடு பயணத்தை முடித்து கொண்டு செப்.30 காலை மீண்டும் சென்னை திரும்பினார்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் ‘பிகில்’படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது சென்னை திரும்பியுள்ள நடிகர் விஜய் அக்டோபர் 3ம் தேதி முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்த உள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத், ஆகியோர் பணிபுரிகின்றனர்.
விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக லண்டன் சென்றால் ஒரு மாதம் வரை விஜய் அங்கு தங்கியிருப்பது வழக்கம். ஏனென்றால் அவரது மாமியார் வீடு அங்கு தான். ஆனால் இந்த முறை ஒரே வாரத்திற்குள் விஜய் சென்னை ஓடி வந்திருப்பதன் பின்னணியில் ஆளுங்கட்சியின் மிரட்டல் இருப்பதாக கூறுகிறார்கள்.
பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் யாரையும் உட்கார வைக்க வேண்டிய இடத்தில் உட்கார வைக்க வேண்டும் என்று விஜய் பேசியது எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்து தான் என்று பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இதனால் பிகில் படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு அரசு தரப்பில் இருந்து சில இன்ஸ்ட்ரக்சன் சென்றுள்ளதாக சொல்கிறார்கள். இதனால் படத்தை வெளியிட சில திரையரங்ககுள் தயங்குவதாக கூறப்படுகிறது.
இதே போல் படத்தை சென்சார் செய்வதிலும் பிரச்சனை எழுந்துள்ளது. மேலும் படததில் கடைசியாக சேர்க்க ஒரு சீன் படமாக்க வேண்டியுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் 3 பிரச்சனைகள் வந்த காரணத்தினால் விஜய் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார்.