ஸ்டாலினால் நீட் சட்டத்துக்கு தடை வாங்க முடியுமா? தி.மு.க.வினரே கிண்டல்

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தில் நீட் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அக்குவேறு ஆணி வேறாக அம்பலப்படுத்திக் காட்டினார். நீட் தேர்வு, மத்தியில் திமுக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் அரசாலேயே கொண்டுவரப்பட்டது என்று சுட்டிக் காட்டினார்.


இந்த நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு தடை வாங்குவோம் என்று சொல்வதை நிறைவேற்ற முடியுமா என்று தி.மு.க.விலே கேள்வி கேட்கிறார்கள். 

நீட் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று திமுக ஐடி விங்கின் பொறுப்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே எச்சரிக்கை செய்தாராம். நீட் விவகாரத்தில் நாம மூக்கை நுழைக்க வேண்டாம். அது நமக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும் என சொன்னதைக் கேட்காமல் பேசியதால், அவர் டென்ஷனில் இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் உச்சபட்ச காமெடியாகத்தான் ஸ்டாலின் அறிவிப்பு தெரியவந்துள்ளது. அதாவது நீட் தேவை என்று நீதிமன்றமே தெளிவாக சொன்ன பிறகு எப்படி தடை வாங்க முடியும். இதெல்லாம் சாத்தியமா, பொய் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா!’’ என தி.மு.க.வினரே டென்ஷன் ஆகிறார்கள்.