ஆர்டர் கொடுத்தால் டோர் டெலிவரியாகும் கள்ளச்சாராயம்! - கடலூர் குடிமகன்களுக்கு நல்ல யோகம்தான்

கடலூர் மாவட்டத்தில் செல்போனில் ஆர்டர் கொடுத்தால் கள்ளசாராயம் வீடு தேடி வரும் மற்றும் டோர் டெலிவரி இலவசம் என இரு சக்கர வாகனத்தில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இதனை காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் பெட்டி மற்றும் முன்புற கவர்களில் கலாசாரங்களை போட்டு ரோட்டில் நின்று கொண்டிருக்கும் குடிமகன்களிடம் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர். அவற்றை வாங்கும் குடிமகன்கள் மறைவான பகுதிக்கு செல்லாமல் நடு ரோட்டிலேயே வைத்து கள்ள சாராயம் அருந்தி ரோட்டில் வருபவர்களை தொந்தரவு செய்து வருகின்றனர்.  

இந்நிலையில் இதுகுறித்து பலமுறை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த ஊர் மக்கள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரு பாக்கெட் சாராயத்தின் விலை 60 முதல் 80 வரை இருக்கும் என குடிமகன்கள் தெரிவிக்கின்றனர்.

அவற்றை வாங்கி குடித்துவிட்டு ரோட்டில் செல்லும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை துன்புறுத்துவதாக அந்த ஊர் மக்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறை தீர்ப்பு கூட்டத்தில் அந்த ஊர் பொதுமக்கள் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.