கதறிய தந்தை! மனம் இறங்காத டாக்டர்கள்! பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

டாக்டர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது உயிரிழந்த பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தியபடி கதறியழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.


மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக, டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அகர்பாரா என்ற பகுதியில், ஜூன் 11ம் தேதி அப்ஜித் மாலிக் என்பவரின் மனைவிக்கு புதியதாக குழந்தை பிறந்துள்ளது. எனினும, அந்த குழந்தையின் உடல்நிலை சரியில்லை என்பதால், உடனே அருகாமையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை கொண்டு செல்லும்படி, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதன்பேரில், தனது குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு, அப்ஜித் மாலிக், அந்த குழந்தைகள் நல மருத்துவமனை சென்றார். ஆனால், அங்கோ போராட்டத்தைக் காரணம் காட்டி எந்த டாக்டரும், சிகிச்சை அளிக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், அப்ஜித் மாலிக்கின் குழந்தை பிறந்த 2வது நாளில், ஜூன் 13ம்தேதியன்று பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது. மருத்துவர்கள் மற்றும் மாநில சுகாதாரத் துறையின் அலட்சியம் காரணமாக, தனது குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, அப்ஜித் மாலிக் கதறியழுதார். இந்த செய்தி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.