நான்கு சட்டசபை இடைத்தேர்தல்களிலும் பிரசாரம் செய்ய தயாராக இருப்பதாக ஒருவழியாக அறிவித்துவிட்டார் பிரேமலதா. ஆனால், இதுவரை டூர் லிஸ்ட் வரவில்லை. என்னவென்று விசாரித்தால், அடுத்தகட்ட செலவுப் பணம் வந்துசேரவில்லையாம்.
விட்டமின் "ப" வந்தால் தான் பை எலக்சன் பிரச்சாரம்! பிரேமலதா அடம்!

இந்த இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக அன்புமணி குரூப்புக்கு பணம் செட்டில் செய்துவிட்டதாக யாரோ பிரேமலதாவுக்கு சொன்னார்களாம். அதைக் கேட்டு உடனே அ.தி.மு.க. தலைமையிடம் மீண்டும் சண்டைக்குப் போனாராம் பிரேமலதா.
உடனே டென்ஷன் ஆன அ.தி.மு.க. தரப்பு, இது அந்தத் தேர்தலின் மிச்ச சொச்சம்தான். அதனால், இப்போதைக்கு எதுவும் தரமுடியாது என்று மேலிடம் மறுத்துவிட்டதாம். அதனால் கொந்தளிப்பில் இருக்கும் பிரேமலதா பிரசாரம் போவதற்கு யோசிக்கிறாராம். மேலும் கூட்டணியில் பா.ஜ.க மற்றும் பா.ம.க. போகாதபோது தான் மட்டும் எதற்குப் போகவேண்டும் என்று யோசிக்கிறாராம்.
நல்லா யோசிங்கம்மா….