சென்னை பெரும் தொழிலதிபர் ரீட்டா தற்கொலை! ஆட்டோ மொபைல் இன்டஸ்ட்ரி வீழ்ச்சி காரணமா?

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்துவந்தார் தொழில் அதிபர் ரீட்டா.


50 வயதான ரீட்டா லான்சன் டயோட்டா கார் கம்பெனியின் உரிமையாளர் ஆவார். இன்று காலை 11 மணி அளவில் ரீட்டா தனது வீட்டில் அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

ஜன்னல் திரையை சுருக்குக்கயிறாக தூக்கில் தொங்கியிருக்கிறார் ரீட்டார். இவரது கணவர் லங்காலிங்கம் எனப்படும் லங்கா முருகேசன் நாடாரும் இதே துறையில்தான் இருக்கிறார். இருவரும் இணைந்துதான் தொழில் செய்துவந்தனர். இவருக்கு சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரம் என்று சொல்லப்படுகிறது.

கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலையா அல்லது பொருளாதார மந்தம் காரணமாக பணப் பிரச்னை காரணமா என்பது இன்னமும் தெரியவில்லை. இவரது மரணம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.