பெங்களூரு: கர்நாடகாவில், சுமார் 300 கிலோ போலியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிரபல தொழில் அதிபர் வீட்டின் நீச்சல் குளத்திற்கு 300 கிலோ தங்க கட்டிகள்! சோதனை செய்து அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!

பொன்ஸி எனப்படும் முதலீட்டுத் திட்டத்தின்கீழ், ஏராளமான மோசடி செய்ததாக, கர்நாடகாவைச் சேர்ந்த ஐஎம்ஏ குரூப் வர்த்தக நிறுவனம் புகாரில் சிக்கியுள்ளது. அதன் உரிமையாளர் முகமது மன்சூர் கான், ஏராளமான தங்கக் கட்டிகளை காட்டி, பொதுமக்களை ஏமாற்றி, தனது நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார்.
ஆனால், இவர் போலியான தங்கக் கட்டிகளை காட்டியே பொதுமக்களை ஏமாற்றி வந்திருக்கிறார். இதுபற்றி வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் அளிக்கவே, முகமது மன்சூர் கான் துபாய்க்கு தப்பிச் சென்றுவிட்டார். போவதற்கு முன், தங்கக் கட்டிகளை யாருக்கும் தராமல், ஒரு ரகசிய இடத்தில் பதுக்கி வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவரது நிறுவனத்தில் சுமார் 40,000 பேர் பொன்ஸி முதலீட்டு திட்டத்தின் கீழ் முதலீடு செய்திருக்கிறார்கள். இவர்கள் பலரும் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.
இதையடுத்து, ஐஎம்ஏ குரூப் நிறுவனத்தின் இயக்குனர்கள் 12 பேர் உள்ளிட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்துவிதமான சொத்துகள், வங்கிப் பரிவர்த்தனைகளையும் அமலாக்கத்துறையினர் முடக்கினர்.
இதற்கிடையே துபாய் சென்ற முகமது மன்சூர் கான், இந்தியா திரும்பினார். அவரை டெல்லி விமான நிலையத்தில் சுற்றி வளைத்து கைது செய்த அமலாக்கத்துறையினர், பெங்களூருவில் உள்ள கட்டிடம் ஒன்றில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், அங்கிருந்த நீச்சல் குளத்தின் அடியில் இருந்து 303 கிலோ மதிப்புடைய போலி தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை தீவிரமடைடைந்துள்ளது.