4 கொடூரர்கள் என்கவுண்டர்! ஹைதராபாத் போலீசாருக்கு லட்சக்கணக்கில் பரிசு அறிவித்த தொழில் அதிபர்! யார் தெரியுமா?

ஹைதராபாத்தில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த நான்கு பேரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இந்த என்கவுண்டரில் ஈடுபட்ட அனைத்து போலீசாருக்கும் பரிசு தருவதாக தொழிலதிபர் ஒருவர் திடீரென அறிவித்துள்ளார்.


ஹைதராபாத்தில் கடந்தவாரம் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கற்பழிப்பு எரித்துக் கொலை சம்பவத்திற்க்காக நால்வரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை எவ்வாறு கொலை செய்தீர்கள் என நடித்து காட்டுவதற்காக 4 பேரை போலீசார் அழைத்துச் சென்றபோது, நான்கு பேரும் ஒவ்வொரு புரமாக தப்ப முயற்சித்துள்ளனர்.  

இதனை கண்ட காவல்துறையினர் நான்கு பேரையும் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த செய்தியை கேட்ட ஹரியானா மாநில தொழிலதிபர் ஒருவர், இந்த என்கவுண்டரில் ஈடுபட்ட அனைத்து காவல் துறையினருக்கும் தலா ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தார்.

ரா குரூப் பவுண்டேசன் மூலமாக தொழில் அதிபர் நரேஷ் செல்யார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த என்கவுண்டரில் ஈடுபட்ட அத்தனை போலீசாருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் தருவதாக அவர் கூறியுள்ளார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.