டாக்டருக்கு படிக்கும் அப்பாவின் நண்பரின் மகள்! வீட்டிற்கு அழைத்து தொழில் அதிபர் அரங்கேற்றிய மோசமான செயல்!

சென்னையில் தந்தையின் நண்பரின் மகளை படுக்கைக்கு அழைத்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பலருக்கு முகம் சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


பெரியார் நகரை சேர்ந்த தொழிலதிபர் சாமுவேல் வாரந்தோறும் கிறித்துவ தேவாலயம் செல்வது வழக்கம். அங்கு அறிமுகமான டைசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நண்பர்களாக மாறிவிட்டனர். தந்தையின் நண்பரின் மகன் என்ற அடிப்படையில் சாமுவேலின் மகன் ஜோஸ் என்ற தொழிலதிபருடன் டைசசின் மகள் நட்பாக பேசி வந்துள்ளார்.

அவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் டாக்டருக்கு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு அடிக்கடி போன் செய்து வந்த ஜோஸ் நான் இறக்குமதி தொழில் செய்வதால் நாம் இருவரும் சேர்ந்து புதிய தொழில் தொடங்கலாம் என கூறியுள்ளார். மேலும் புதிய தொழில் குறித்து ஆலோசிக்கலாம் என பலமுறை அந்த மாணவியை அழைத்துள்ளார் ஜோஸ்.

அவரது அழைப்புகளை நிராகரித்து வந்த மாணவி ஒரு கட்டத்தில் என்னதான் பேசுகிறார் பார்ப்போம் என ஜோஸ் வீட்டிற்கு சென்றுள்ளார் மாணவி. அங்கு சென்ற உடன்தான் மாணவிக்கு தெரிந்தது யாரும் இல்லாமல் ஜோஸ் வீட்டில் தனிமையில் இருப்பது. வீட்டிற்கு வந்த மாணவியுடன் திடீரென உடலுறவு செய்ய முற்பட்டார் ஜோஸ்.

இதை சற்றும் எதிர்பாராத மாணவி அவரிடம் இருந்து தப்பிக்க நான் உங்களை காதலிக்கிறேன், நானே உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் அவர் அளித்த தகவலில் டைசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாதவரம் போலீஸ் ஜோசை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.