10 ரூபாய் நாணயத்தை வாங்காதீங்க! கண்டக்டர்களுக்கு மேலதிகாரிகள் உத்தரவு! பயணிகள் அதிர்ச்சி!

10 ரூபாய் நாணயத்தை வாங்கக்கூடாது என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயத்தை அறிமுகம் செய்தது முதலே அந்த நாணயம் செல்லுமா செல்லாதா என்கிற சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. பத்து ரூபாய் நாணயங்களை தற்போதுவரை கடைகள் முதல் பேருந்துகள் வரை எவருமே தயக்கமின்றி வாங்குவது இல்லை. இதற்கு காரணம் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்று அவ்வப்போது புறப்படும் வதந்திதான்.

இந்த நிலையில் கோவை சரக போக்குவரத்து கழகம் தனது கண்டக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் பத்து ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்க மறுப்பதால் பயணிகளிடம் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதை தவிர்க்குமாறு மேலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்படியே தவிர்க்க முடியாத சூழலில் 10 ரூபாய் நாணயத்தை வாங்கி விட்டாலும் அதனை தங்கள் இடம் கொடுக்க வேண்டாம் என்று மேலாளர் கூறியுள்ளது கண்டக்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஏற்கனவே 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று மக்கள் மத்தியில் ஒரு வதந்தி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலைகள் அரசு போக்குவரத்து கழக மே 10 ரூபாய் நாணயத்தை பயணிகளிடமிருந்து வாங்க வேண்டாம் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கியால் புழக்கத்திலுள்ள பத்து ரூபாய் நாணயத்தை வாங்கக்கூடாது என்று போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது மிகப்பெரிய குற்றம் என்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.